/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆக்கிரமிப்பு அகற்றம் கிராம மக்கள் வாக்குவாதம்
/
ஆக்கிரமிப்பு அகற்றம் கிராம மக்கள் வாக்குவாதம்
ADDED : மார் 20, 2025 05:55 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் பொதுப்பாதையை ஆக்கிரமித்திருந்த கட்டடங்களை அதிகாரிகள் நேற்று இயந்திரம் மூலம் அகற்றினர்.
செல்லப்பனேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தெருக்களை ஆக்கிரமித்து பலரும் கட்டடங்களை கட்டியிருப்பதால் ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. எனவே அவற்றை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததையடுத்து நேற்று காலை தாசில்தார் விஜயகுமார், நில அளவை துறையினர், போலீசார் ஆக்கிரமிப்புகளை அளவிட்டு அகற்றினர்.
இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது கட்டடங்கள் சேதமானதையடுத்து பலரும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.