/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மரங்கள் வெட்டி கடத்தலா; கிராம மக்கள் புகார்
/
மரங்கள் வெட்டி கடத்தலா; கிராம மக்கள் புகார்
ADDED : செப் 02, 2025 03:34 AM

காரைக்குடி : கல்லல் ஒன்றியம் ஆலம்பட்டு ஊராட்சியில் 5க்கும் மேற்பட்ட கண்மாய்களில் மேய்ச்சல் தள பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் வெட்ட பொது ஏலம் விடப்பட்டது. இதில், வேலிக்கருவேல மரங்கள் தவிர பிற மரங்களை வெட்டக்கூடாது. மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் போது கட்டுமானங்களுக்கோ கரைப்பகுதிக்கோ பாதிப்பு ஏற்படக்கூடாது.
அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் கண்மாய்க்குள் தண்ணீர் தேங்கினால் அப்புறப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஏலம் விடப்பட்டது. இந்நிலையில், கருவேல மரங்கள் வெட்டுவதாக கூறி பசுமை மரங்கள் வெட்டி கடத்தியதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
கிராம மக்கள் கூறுகையில்: வேம்பு, புளி, வாகை உட்பட 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. பசுமை மரங்களை வெட்டியவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள் கூறுகையில்: மரங்கள் வெட்டப்பட்டது குறித்து புகார் ஏதும் வரவில்லை. விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.