/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காஞ்சிரங்கால் ஊராட்சி அன்பு நகரில் தார்ரோடு, தெருவிளக்கு இல்லை கிராமத்தினர் கலெக்டரிடம் புகார்

ADDED : டிச 20, 2024 02:58 AM

சிவகங்கை: காஞ்சிரங்கால் ஊராட்சி அன்புநகரில் தார்ரோடு,மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரக்கோரி அப்பகுதி மக்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம்,காஞ்சிரங்கால் ஊராட்சியில் அன்பு,சித்தி விநாயகர்,திருவள்ளுவர்,குபேரன், சிவசிவ நகர் பகுதிகளில் 400 குடும்பங்கள் வரை வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு முறையான தார்ரோடு,பேவர் பிளாக் சாலை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தர வில்லை.அதே போன்று இந்நகர் பகுதி வீடுகளுக்கு இரவு நேர பாதுகாப்பிற்கான தெருவிளக்கு வசதியும் செய்துதர வில்லை. அப்பகுதி மக்கள் காஞ்சிரங்கால் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும்,எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் மனு அளித்தனர்.
அன்புநகர் கணேசன் கூறியதாவது: கலெக்டரை சந்தித்து, அன்புநகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தெருக்களுக்கு ரோடு, மின்விளக்கு வசதி இல்லை என கோரிக்கை வைத்தோம். அவர் பி.டி.ஓ., அழைத்து தார்ரோடு, தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்தி தருமாறு தெரிவித்தார், என்றார்.