/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோடு வசதி கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
/
ரோடு வசதி கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
ரோடு வசதி கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
ரோடு வசதி கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
ADDED : நவ 25, 2025 04:51 AM

தேவகோட்டை: ரோடு வசதி கேட்டு மறியலுக்கு முயன்ற கிராமத்தினரை சமாதானக் கூட்டத்திற்கு அழைத்தனர். உரிய அதிகாரிகள் வராததால் கிராமத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவேகம்பத்துார் ஊராட்சியைச் சேர்ந்த கிராமம் களத்துார். திருவேகம்பத்துாரில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த கிராமத்தில் 85 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
ரோடு, குடிநீர் வசதி இல்லாததால் ஒவ்வொரு குடும்பமாக காலி செய்து தேவகோட்டை, காரைக்குடி நகரங்களில் வசிக்கின்றனர். ஒரு சில வீடுகளை தவிர அனைத்தும் பூட்டியே கிடக்கின்றன.
25 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட ரோட்டில் மாணவ மாணவியர் சைக்கிளில் கூட போக முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக தினமலர் நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர். அவசரத்திற்கு மருத்துவமனை செல்ல ஆட்டோ கூட வராத நிலை ஏற்பட்ட தால் ரோடு அமைத்து தரக் கோரி நாளை சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
நேற்று மாலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சேதுநம்பு தலைமையில் சமாதானக் கூட்டத்திற்கு அழைத்து இருந்தனர். கிராமத்தினர் 150 பேர் வந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட பி.டி.ஓ. க்கள் , பொறியாளர்கள் பங்கேற்கவில்லை.
நாளை மறியல் செய்வதென முடிவு செய்த நிலையில் கிராமத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

