/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் மாடுகள் மோதல் காத்து கிடந்த ஆம்புலன்ஸ்
/
திருப்புவனத்தில் மாடுகள் மோதல் காத்து கிடந்த ஆம்புலன்ஸ்
திருப்புவனத்தில் மாடுகள் மோதல் காத்து கிடந்த ஆம்புலன்ஸ்
திருப்புவனத்தில் மாடுகள் மோதல் காத்து கிடந்த ஆம்புலன்ஸ்
ADDED : நவ 25, 2025 04:52 AM

திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனை முன் கோயில் மாடுகள் மோதியதால் ஆம்புலன்ஸ் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு தினசரி ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விபத்து மற்றும் அவசர காலங்களில் சிகிச்சை அளிக்க நோயாளிகளை அழைத்து வர 108 ஆம்புலன்ஸ் செல்வது வழக்கம்.
நேற்று மாலை 5:30 மணிக்கு விருதுநகர் மாவட்டம் பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் 28 என்பவருக்கு உடல்நிலை ( வலிப்பு நோய்) பாதிக்கப்பட்டதால் திருப்பாச்சேத்தி 108 ஆம்புலன்ஸ் சென்று பாதிக்கப்பட்டவரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
முதல் உதவி சிகிச்சைக்கு பின் மதுரைக்கு பரிந்துரை செய்ததால் மீண்டும் 108 ஆம்புலன்சில் மதுரைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது வாசலில் கோயில் மாடுகள் 20 நிமிடத்திற்கு மேலாக மோதியதால் ஆம்புலன்ஸ் வெளியேற முடியவில்லை.
பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி மாடுகளை விரட்டி அடித்தனர். அதன்பின் ஆம்புலன்ஸ் வாகனம் மதுரைக்கு புறப்பட்டு சென்றது.

