/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேதமடைந்த கொங்கம்பட்டி ரோடு அவதியில் கிராம மக்கள்
/
சேதமடைந்த கொங்கம்பட்டி ரோடு அவதியில் கிராம மக்கள்
ADDED : அக் 10, 2024 05:40 AM

இளையான்குடி: இளையான்குடி அருகே கொங்கம்பட்டிக்கு செல்லும் ரோடு குண்டும்,குழியுமாக நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடியில் இருந்து ஆர்.எஸ்.,மங்கலம் செல்லும் மெயின் ரோட்டிலிருந்து கொங்கம்பட்டி செல்லும் ரோடு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்டு அப்படியே விட்டு சென்றதால் தற்போது ரோட்டில் எங்கு பார்த்தாலும் குண்டும்,குழியுமாக மக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்பது தெரியாமல் மக்கள் பள்ளங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
கொங்கம்பட்டி கிராமத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் கூட அவசர காலத்திற்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் கூட வர மறுக்கின்றனர்.ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த ரோட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.