/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
100 நாள் வேலை நிறுத்தம் கிராம மக்கள் மறியல்
/
100 நாள் வேலை நிறுத்தம் கிராம மக்கள் மறியல்
ADDED : ஜன 24, 2025 04:34 AM

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள இலுப்பக்குடியில் 100 நாள் வேலை நிறுத்தப்பட்டதை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட இலுப்பக்குடி ஊராட்சி, காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 100 நாள் வேலைத்திட்ட பணிகளுக்கு கிராம மக்கள் சென்ற நிலையில் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆத்திரம் அடைந்த, அப்பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் மறியலில் ஈடுபட முற்பட்டனர். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், பா.ஜ., மாவட்டத் துணைத் தலைவர் நாராயணன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிகாரிகள் யாரும் வராததால், இலுப்பகுடி மாத்துார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
100 நாள் திட்டத்தை நீட்டிக்க பேச்சுவார்த்தை மேற்கொள்வதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

