/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி அருகே குழாயில் உடைப்பு குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் தவிப்பு
/
இளையான்குடி அருகே குழாயில் உடைப்பு குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் தவிப்பு
இளையான்குடி அருகே குழாயில் உடைப்பு குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் தவிப்பு
இளையான்குடி அருகே குழாயில் உடைப்பு குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் தவிப்பு
ADDED : நவ 19, 2024 05:28 AM

இளையான்குடி: இளையான்குடி அருகே இந்திரா நகரில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சியின் போது திருச்சி காவிரி ஆற்றிலிருந்து ராமநாதபுரம் வரை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 55 ஊராட்சிகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும்,
இளையான்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வார்டு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 15 வருடங்களுக்கும் மேலாகி விட்ட காரணத்தினாலும்,போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தினாலும், குடிநீர் குழாய்களில் அவ்வப்போது ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.
நேற்று காலை இளையான்குடி அருகே இந்திரா நகர் பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தண்ணீர் வீணாக வெளியேறியது.
இளையான்குடி மக்கள் கூறியதாவது: இளையான்குடி கிராமப் பகுதிகளிலும், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் காவிரி கூட்டு குடிநீர் 20 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருவதினால் ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூட குடிநீர் விநியோகம் செய்யாததால் வாகனங்களில் வரும் நீரை விலை கொடுத்து வாங்கி வருகிறோம் என்றனர்.

