/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சமுதாயக்கூடம் இல்லாமல் கிராம மக்கள் தவிப்பு
/
சமுதாயக்கூடம் இல்லாமல் கிராம மக்கள் தவிப்பு
ADDED : செப் 09, 2025 04:02 AM
எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே சமுதாயக்கூடம் இல் லாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் மேலவண்ணாரிருப்பு ஊராட்சிக்குட்பட்ட கீழவண்ணாரிருப்பு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மலையடிவாரத்தில் மலைத்தொடர்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இக்கிராமத்தில் சமுதாயக்கூடம் எதுவும் இல்லை. இதனால் விசேஷ நாட்களில் நிகழ்ச்சிகளை சொந்த கிராமத்தில் நடத்த முடியாமல் மக்கள் தவிக்கிறனர்.
பேரிடர் காலங்களில் இக்கிராம மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இக்கிராம மக்கள் வீட்டு நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகவும், இயற்கை பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக தங்கிக் கொள்ளவும் சமுதாயக் கூடத்தை உயரமான பகுதியில் கட்டித்தர வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கின்றனர்.