/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவில் தாலுகாவில் இருந்த கிராமங்கள் மானாமதுரையுடன் இணைப்பு
/
காளையார்கோவில் தாலுகாவில் இருந்த கிராமங்கள் மானாமதுரையுடன் இணைப்பு
காளையார்கோவில் தாலுகாவில் இருந்த கிராமங்கள் மானாமதுரையுடன் இணைப்பு
காளையார்கோவில் தாலுகாவில் இருந்த கிராமங்கள் மானாமதுரையுடன் இணைப்பு
ADDED : டிச 06, 2024 05:32 AM
மானாமதுரை: காளையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட புளியங்குளம், கே.பெருங்கரை, கீழப்பிடாவூர் குரூப்பிற்குட்பட்ட கிராமங்களை மானாமதுரை தாலுகாவில் இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் மேற்கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
புளியங்குளம் குரூப்பில் உள்ள விளாக்குளம், பில்லத்தி, கீழமாயாளி, மேலமாயாளி, புளியங்குளம் ஆகிய கிராமங்களும், கே.பெருங்கரை குரூப்பில் உள்ள கே.பெருங்கரை, என்.பெருங்கரை, வேலானி ஆகிய கிராமங்களும், கீழப்பிடாவூர் குரூப்பில் கீழப்பிடாவூர் கிராமமும் சிவகங்கை தாலுகாவில் இருந்து வந்த நிலையில் 2015ம் ஆண்டு காளையார்கோவில் தாலுகா உருவாக்கப்பட்ட போது இந்த 3 குரூப்புகளையும் சேர்ந்த கிராமங்கள் காளையார்கோவில் தாலுகாவோடு இணைக்கப்பட்டது.
மேற்கண்ட 3 வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் காளையார்கோவில் செல்வதற்கு 3 பஸ்கள் மாறி 54 கிலோ மீட்டர் துாரம் பயணம் செய்து வந்தனர். மேலும் பில்லத்தி, என். பெருங்கரை கிராமத்தை தவிர மற்ற கிராமங்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், வேளாண்மை துறை அலுவலகம்,வட்ட வழங்கல் அலுவலகம் போன்ற அலுவலகங்கள் மானாமதுரை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
மேலும் இக்கிராமங்களிலிருந்து மானாமதுரை செல்வதற்கு 6 கிலோமீட்டர் துாரமே உள்ள நிலையில் மேற்கண்ட அனைத்து கிராமங்களையும் மானாமதுரை தாலுகாவோடு இணைக்க வேண்டுமென்று நீண்ட காலமாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
மேலும் விளாக்குளத்தை சேர்ந்த கிருஷ்ணதேவர் என்பவர் மேற்கண்ட கிராமங்களை காளையார் கோவில் தாலுகாவிலிருந்து பிரித்து மானாமதுரை தாலுகாவோடு இணைக்க வேண்டுமென்று மதுரை ஐகோர்ட் கிளையிலும் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் மேற்கண்ட 3 வருவாய் குரூப்பிற்குட்பட்ட அனைத்து கிராமங்களையும் மானாமதுரை தாலுகாவோடு இணைக்க பரிந்துரை செய்ததை தொடர்ந்து தமிழக அரசு மேற்கண்ட கிராமங்களை மானாமதுரை தாலுகாவோடு இணைத்து செய்களத்துார் வருவாய் குரூப்போடு சேர்த்து உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.