/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் வைரஸ் காய்ச்சல் பரவல்
/
காரைக்குடியில் வைரஸ் காய்ச்சல் பரவல்
ADDED : அக் 02, 2025 11:36 PM
காரைக்குடி ; காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், தட்பவெட்ப நிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல் தாக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தட்பவெட்ப நிலை மாற்றத்தால் வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை காய்ச்சலுக்கு உள்ளாகி அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இக்காய்ச்சல் ஏற்படுவோருக்கு உடல் சோர்வு, உடல் வலி, தொண்டை வலி, இருமல், மூக்கில் நீர்வடிதல் ஏற்படும். இக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது, மழை, வெயில் என சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என்றார்.