ADDED : செப் 02, 2025 11:49 PM
திருப்புத்துார்; திருமயம் லேனாவிலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மத்திய கல்வி அமைச்சகத்தின் தொலைதொடர்பு வழி கல்விக்கான தேசிய திட்டத்தின் ஐஐடி மெய்நிகர் ஆய்வக திட்டத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
ஆய்வக முதன்மை அதிகாரி ஸ்ரீனிவாசன் கூறியதாவது: இயற்பியல், வேதியியல், இயந்திர, சிவில், மின்னியல், மற்றும் கணினி, சார்ந்த பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் 175க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் மூலம் 1590க்கும் மேற்பட்ட சோதனைகளை வழங்கியுள்ளது. வீடியோ விளக்கங்கள், அனிமேஷன் விளக்கங்கள் மற்றும் சுய மதிப்பீட்டு கருவிகள் மூலம் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது. முன்னோடி பொறியியல் கருத்துகளை ஆழமாக புரிந்து கொள்ள உதவியது என்றார்.
ஐஐடி மெய்நிகர் ஆய்வக திட்ட மேலாளர் தருண் தாஸ், இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், முதல்வர் ப.பாலமுருகன், முதன்மையர் ராபின்சன் பாராட்டினர்.