/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின்றி கேள்விக்குறியாகும் தொழிற்கல்வி
/
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின்றி கேள்விக்குறியாகும் தொழிற்கல்வி
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின்றி கேள்விக்குறியாகும் தொழிற்கல்வி
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின்றி கேள்விக்குறியாகும் தொழிற்கல்வி
ADDED : செப் 08, 2025 06:09 AM
திருப்புவனம் : தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்பு தொடங்கப்பட்டு மாணவ, மாணவியருக்கு கற்றுத்தரப்பட்டது. தட்டெழுத்து பயிற்சி, விவசாயம், ஓவியம், இயந்திர பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இதில் கற்று தரப்பட்டன.
தொழிற்கல்வி முடித்து வெளியேறும் மாணவர்கள் சுய தொழில் செய்து வாழ்வில் முன்னேறலாம் என்ற திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டது. தொழிற்கல்வி படிப்பிற்காக அரசு பள்ளிகளுக்கு தட்டச்சு இயந்திரங்கள், கார்கள் வழங்கப்பட்டது.
தொழிற்கல்வி படிப்புகள் மூடப்பட்டதால் அதற்காக வழங்கப்பட்ட வாகனங்கள் பராமரிப்பின்றி வெயிலிலும் மழையிலும் வீணாகி வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 1981ல் தேர்வு செய்யப்பட்ட ஐம்பது பள்ளிகளில் முதன் முதலில் தொடங்கப்பட்டன. படிப்படியாக கூடுதல் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஆண்கள், பெண்கள் பள்ளி உட்பட 15 பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்புகள் தொடங்கப்பட்டன.
தற்போது பத்திற்கும் குறைவான பள்ளிகளிலேயே தொழிற்கல்வி கற்பிக்கின்றனர். திருப்புவனம் பெண்கள் பள்ளியில் இயந்திர பராமரிப்பு படிப்பிற்காக வாங்கப்பட்ட கார் பள்ளி வளாகத்தில் வெயிலிலும் மழையிலும் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத அளவிற்கு இருப்பதுடன் அதனுள் விஷ பூச்சிகள் தஞ்சமடைந்து வருகின்றன.