ADDED : ஜூலை 05, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் பிள்ளையார்பட்டியில் பி.என்.பி.,உழவர் பயிற்சி மையத்தில் விவசாயிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஒரு நாள் பயிற்சியாக ஜூலை 11-ல் பினாயில்,சோப்பு ஆயில்,சோப்பு பவுடர் தயாரித்தல்,ஜூலை 17-ல் நெல்லிக்காய் மதிப்பு கூட்டல், ஜூலை 18-ல் நாட்டுக்கோழி வளர்ப்பு, ஜூலை 19-ல் மண்புழு உரம் தயாரித்தல், ஜூலை 25-ல் இயற்கை விவசாயம்,இடுபொருட்கள் தயாரித்தல், ஜூலை 29-ல் சிறுதானியத்தில் ஐஸ்க்ரீம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படும். இருநாட்கள் பயிற்சியாக ஜூலை 15,16-ல் மூலிகை குளியல் சோப்பு தயாரித்தல், ஜூலை 22,23-ல் பழ ஜாம், ஸ்குவாஸ்,ஜெல்லி தயாரித்தல், ஜூலை 14,19-ல் கால் மிதியடி தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சி நடைபெறும். இலவச பயிற்சியில் பங்கேற்க 94885 75716ல் பதிவு செய்யலாம்.