/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்டத்தில் நவ., 4 முதல் வாக்காளர் கணக்கெடுப்பு பணி
/
மாவட்டத்தில் நவ., 4 முதல் வாக்காளர் கணக்கெடுப்பு பணி
மாவட்டத்தில் நவ., 4 முதல் வாக்காளர் கணக்கெடுப்பு பணி
மாவட்டத்தில் நவ., 4 முதல் வாக்காளர் கணக்கெடுப்பு பணி
ADDED : அக் 29, 2025 09:38 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நவ., 4 முதல் டிச., 4 வரை வீடு வீடாக ஓட்டுச்சாவடி அலுவலர்களால் வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக மாவட்ட தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் கூறியதாவது: தேர்தல் கமிஷன் 2026 ஜன., 1 யை தகுதி நாளாக கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்க உள்ளது. இம்மாவட்டத்தில் நவ., 4 முதல் டிச., 4 வரை அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர்களால் வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட உள்ளது.
கணக்கெடுப்பின் போது, தற்போதைய நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் சுய விபரங்கள் பகுதியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவங்கள், இரட்டை பிரதிகள் வழங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்த படிவங்களின் அடிப்படையில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரித்து, டிச., 9ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கிடும் வகையில், டிச., 9 முதல் 2026 ஜன., 8 வரை படிவம் 6, மற்றும் 8 ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் சமர்பிக்கலாம்.
2026 பிப்., 7 ம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே வாக்காளர்கள் நவ., 4 முதல் டிச., 4 வரை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி, பூர்த்தி செய்த படிவங்களை சேகரிக்க உள்ளனர். இவர்களுக்கு வாக்காளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். வாக்காளர்கள் ''https://voters.eci.gov.in'' இணையதளத்தின் மூலம் சுயவிபரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

