/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் காத்திருப்பு போராட்டம்
/
சிவகங்கையில் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 07, 2025 11:32 PM
சிவகங்கை: ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு, நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்களில் இருந்து சரியான எடையில் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்.
கல்வி தகுதிக்கு ஏற்ப சம்பளம், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளர்களை நியமிக்க வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாநில பொது செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் விற்பனையாளர்கள் ரேஷன் கடைகளை பூட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாவட்ட அளவில் ரேஷன் பொருட்கள் வினியோக பணி பாதிக்கப்பட்டனர்.
காத்திருப்பு போராட்டத்திற்கு பின் கோரிக்கை மனுவை சங்கத்தினர் சிவகங்கை கலெக்டர் பொற்கொடியிடம் வழங்கினர்.