/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை சாலையில் ஓடும் கழிவு நீர்
/
மானாமதுரை சாலையில் ஓடும் கழிவு நீர்
ADDED : செப் 05, 2025 11:50 PM

மானாமதுரை: மானாமதுரையில் நான்கு வழிச்சாலையில் கழிவுநீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை வழி விடு முருகன் கோயில் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கிலிருந்து அருகில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நான்கு வழி சாலையில் ஓடி தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.
ஏராளமானோர் நான்கு வழிச்சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளதாலும், ரோட்டின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதாலும் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.ஆகவே நான்கு வழி சாலை ஆணைய அதிகாரிகள் கழிவு நீர் விடுபவர்கள் மீதும், ரோட்டை ஆக்கிரமித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.