ADDED : மே 09, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை 25வது வார்டான அகிலாண்டாபுரம் வள்ளல் பாரி தெருவில் ரோட்டில் ஓடும் கழிவு நீரால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
அகிலாண்டபுரத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வள்ளல் பாரி தெருவில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ரோட்டில் ஓடுகிறது. மக்கள் தெருவில் நடக்க முடியாத சூழல் உள்ளது. மழை பெய்தால் கழிவு நீர் வீட்டிற்குள் புகும் சூழல் உள்ளது. பல முறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. கொசு தொல்லை அதிகம் உள்ளதாகவும் நோய் அச்சத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.