ADDED : செப் 28, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையில் பல நாட்களாக கடலாடிக்கு செல்லும் வைகை குடிநீர் வீணாகி வருவதால் அதனை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை அருகே உள்ள விரகனுார் மதகு அணையில் இருந்து மானாமதுரை அருகே உள்ள பார்த்திபனூர் மதகு அணை வரை உள்ள வைகை ஆற்று பகுதியில் இருந்து மதுரை,அருப்புக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம்,கடலாடி, முதுகுளத்தூர்,சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக மானாமதுரை வழி விடு முருகன் கோயில் அருகே ராமேஸ்வரம் செல்லும் 4 வழிச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. கூட்டு குடிநீர் திட்ட ஊழியர்கள் சரி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.