/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் பாலாற்றில் நீர் வரத்து துவங்கியது
/
திருப்புத்துார் பாலாற்றில் நீர் வரத்து துவங்கியது
ADDED : அக் 15, 2024 05:16 AM

திருப்புத்துார்: திருப்புத்துாருக்கு பாலாற்றில் நீர்வரத்தால் 11 ஆண்டுகளுக்குப் பின் பெரியகண்மாய் பெருகுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
திருப்புத்துார் பெரியகண்மாய் 476 ஏக்கர் பரப்பளவில் 15 கி.மீ.சுற்றளவில் உள்ளது. 3.08 சதுர கி.மீ பரப்பில் 75 மில்லியன் கன அடி நீரை தேக்கும் கொள்ளளவு கொண்டது.
முன்பு 1200 ஏக்கர் ஆயக்கட்டு கொண்டிருந்தது. தற்போது 100 ஏக்கருக்குள் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. பாசனத்திற்கு மட்டுமின்றி திருப்புத்துாரின் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
11 ஆண்டுகளுக்கு முன்பாக 2013ல் பாலாற்றில்நீர் பெருகி பல நாட்கள் பெரியகண்மாய்க்கு நீர் வரத்தால் மறுகால் சென்றது. அதன்பின்னர் சில முறை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டும் சிங்கம்புணரி பகுதியுடன் நின்று விட்டது.
2022ல் மட்டும் சில மணி நேரம் மட்டும் பெரியகண்மாய்க்கு நீர்வரத்து இருந்தது. தொடர் மழையால் நேற்று முன்தினம் ஆற்றில் நீர்வரத்து துவங்கி சிங்கம்புணரி கடந்து திருவுடையார்பட்டி பெருமிக்கண்மாய் வரை நீர் வந்தது.
கோட்டையிருப்பு, நாட்டார்மங்கலம், கருப்பூர், சுண்ணாம்பிருப்பு, மாதவராயன்பட்டி உள்ளிட்ட கண்மாய்களில் 50 சதவீதம் அளவில் நிரம்பியுள்ளது.
மேலும் வட கிழக்கு பருவமழை துவங்கினால்திருப்புத்தூர் பெரியகண்மாய்க்கு நீர்வரத்து ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11 ஆண்டுகளுக்கு பின் கண்மாய் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கண்மாய் வரத்துக்கால்வாய்களிலும், கரைகளிலும் உள்ள முட்செடிகளை அகற்றியும், கரைகளில் உள்ள பள்ளங்களை சீரமைத்து பராமரிக்கவும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.

