/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பராமரிப்பில்லாத மடையில் வீணாகும் கண்மாய் நீர்
/
பராமரிப்பில்லாத மடையில் வீணாகும் கண்மாய் நீர்
ADDED : ஜன 05, 2025 06:52 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பராமரிப்பில்லாத மடை பழுதானதால் கண்மாய் தண்ணீர் வீணாகி வருகிறது.
இவ்வொன்றியத்தில் ஜெயங்கொண்டநிலை அருகே கருமாத்தூர் கண்மாய் உள்ளது. 80 ஏக்கர் பரப்பு கொண்ட இக்கண்மாய்க்கு 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பாசன நிலங்கள் உள்ளன.
கடந்த மாதம் பரவலாக பெய்த மழை மற்றும் காட்டாறு, பெரியாறு கால்வாய் மூலம் வந்த தண்ணீரால் இக்கண்மாய் நிரம்பியது.
இதன் கீழ் சங்கிலித் தொடர்களாக ஐந்து ஏந்தல்கள் உள்ளன. இந்நிலையில் கண்மாயில் பாசன நிலங்களுக்கு திறக்கப்படும் மடை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் அதில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.
இதை அடைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
இப்பகுதியில் பெரிய அளவில் விவசாயம் நடைபெறவில்லை என்றாலும் இக்கண்மாயில் தண்ணீர் தேங்கி இருந்தால் அது நிலத்தடி நீர்மட்டத்தை தக்க வைக்கவும், கால்நடைகளின் குடிநீருக்கும் உதவுவதாக இருக்கும்.
ஆனால் தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் விரைவில் முழு கண்மாய் தண்ணீரும் வெளியேறிவிடும் நிலை உள்ளது. எனவே மடையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை அடைக்க வேண்டும்.
கே.வீரமணி, காங்., தெற்கு வட்டார தலைவர்; 1967ல் அமைக்கப்பட்ட கண்மாய் மடை ஓரிருமுறை மராமத்து செய்யப்பட்டது.
தற்போது முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் கசிவு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை அடைக்காமல் விட்டால் கண்மாய் காலி ஆகிவிடும்.
எனவே பொதுப்பணித்துறையினர் தற்காலிகமாக மடையை அடைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
தொடர்ந்து பழைய மடைக்கு பதிலாக நவீன முறையில் புதிய மடை அமைத்து தர வேண்டும்.