/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஓரங்கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

ADDED : ஜூலை 22, 2025 11:40 PM

சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் காட்சி பொருளாக இருப்பதால் மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று பொது குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க 500 க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
மாதம் ஒரு நாள் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு நுாற்றுக்கணக்கான விவசாயிகள் வந்து செல்கின்றனர். இது தவிர பல்வேறு தேவைகளுக்காக மக்கள் வந்து செல்கின்றனர்.
இவர்களின் தாகம் தீர்க்க கலெக்டர் அலுவலக தரை தளத்தில் பழைய குறைதீர் கூட்ட அரங்கு செல்லும் வழியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், முதல் தளத்தில் குறைதீர் கூட்ட அரங்கிற்கு செல்லும் வழி, அலுவலக மேலாளர் (செரஸ்தார்) அலுவலகம் முன் என பல இடங்களில் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தினர். சில மாதங்களாக அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் செயல்பாடின்றி காட்சி பொருளாக நிற்கிறது.
முதல்தளத்தில் இருந்த சுத்திகரிப்பு இயந்திரத்தை 'லிப்ட்' வாசலில் ஓரங்கட்டி விட்டனர். அதே போன்று சில இடங்களில் இருந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் காணாமல் போய்விட்டது.
கலெக்டர் வளாகத்தில் உள்ள கடைகளில் ரூ.20 கொடுத்து குடிநீர் பாட்டில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர்.