/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் வரத்துகால்வாய் ஆக்கிரமிப்பால் நீராதாரம் பாதிப்பு
/
காரைக்குடியில் வரத்துகால்வாய் ஆக்கிரமிப்பால் நீராதாரம் பாதிப்பு
காரைக்குடியில் வரத்துகால்வாய் ஆக்கிரமிப்பால் நீராதாரம் பாதிப்பு
காரைக்குடியில் வரத்துகால்வாய் ஆக்கிரமிப்பால் நீராதாரம் பாதிப்பு
ADDED : ஜூலை 13, 2025 11:11 PM
காரைக்குடி: காரைக்குடியில் வரத்து கால்வாய்கள் பலவும் ஆக்கிரமிப்புகளால் அழிந்து வருவதோடு, சாக்கடை கால்வாயாக மாறி வருகின்றன.
காரைக்குடி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சம்பை ஊற்று உள்ளது. சம்பை ஊற்றின் முக்கிய நீர் ஆதாரமாக காரைக்குடி பெரிய கண்மாய், அதலைக் கண்மாய், கோனேரிக் கண்மாய் உள்ளது. இம்மூன்று கண்மாய்களை பாதுகாப்பதன் மூலமே சம்பை ஊற்றினை பாதுகாக்க முடியும்.
ஆனால் கண்மாய்களுக்கு வரக்கூடிய வரத்து கால்வாய் பலவும் ஆக்கிரமிப்பால் அழிந்து வருவதோடு, கழிவுநீர் கால்வாயாகவும் மாறி வருகிறது. காரைக்குடி வ.உ.சி., சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக பெரிய கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய் நீண்ட அகலமான வரத்துக் கால்வாயாகும். இக்கால்வாயில் சாக்கடை கழிவு நீர் விடுவதால் பெரிய மற்றும் நாட்டார் கண்மாய்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, கண்மாய்களின் முக்கிய நீர் ஆதாரமான வரத்து கால்வாய் அழிந்து வருகிறது. மழைநீர், ஆற்று வெள்ளம் சென்ற கால்வாய், சாக்கடையாக மாறியுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் காரைக்குடி பகுதியில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும், என்றனர்.