/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்வாய் உடைந்ததால் வீடுகளை சூழ்ந்த தண்ணீர்
/
கால்வாய் உடைந்ததால் வீடுகளை சூழ்ந்த தண்ணீர்
ADDED : டிச 08, 2024 06:21 AM

மானாமதுரை : மானாமதுரையில் வைகை கால்வாய் உடைந்து 30க்கும் மேற்பட்ட வீடுகளை இரவு நேரத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.
வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய தேவைக்கும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை கண்மாய்க்கு செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஆனந்தபுரம் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள செல்லமுத்து நகர் தெருக்களில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் புகுந்ததால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் சூழ்ந்ததால் இரவில் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர்.
நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து நேற்று ஊழியர்கள் கால்வாயை அடைத்தனர்.