/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆவரங்காட்டில் வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் அவதி
/
ஆவரங்காட்டில் வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் அவதி
ADDED : நவ 05, 2025 12:32 AM

மானாமதுரை: மானாமதுரை அருகேயுள்ள ஆவரங்காடு கிராமத்தில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் சிரமப்பட்டனர்.
மானாமதுரை அருகே மாரநாடு கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் செல்லும் நிலையில் இக்கண்மாயில் இருந்து ஆவரங்காடு கிராமத்தில் உள்ள பாசன வயல்களுக்கு 2.50 கி.மீ., தூரத்திற்கு வாய்க்கால் உள்ளது.
இந்த வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரை நம்பி 500 ஏக்கருக்கும் நிலத்தில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த சில வருடங்களாக வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் சரியாக துார்வாராத காரணத்தினால் ஆங்காங்கே சேதமடைந்துள்ள நிலையில் தற்போது பாசனத்திற்காக வைகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு மாரநாடு கண்மாய்க்கு வந்த பிறகு அங்கிருந்து மேற்கண்ட கால்வாயில் தண்ணீர் திறந்து விடும் போது ஆங்காங்கே உள்ள உடைப்புகளில் தண்ணீர் வெளியேறியதால் ஆவரங்காடு கிராம பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர்.
மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உள்ள கால்வாய்களை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

