/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண் பயணிகளை ஏற்ற மறுத்த டிரைவர் : மறியலில் ஈடுபட்ட பெண்கள்
/
பெண் பயணிகளை ஏற்ற மறுத்த டிரைவர் : மறியலில் ஈடுபட்ட பெண்கள்
பெண் பயணிகளை ஏற்ற மறுத்த டிரைவர் : மறியலில் ஈடுபட்ட பெண்கள்
பெண் பயணிகளை ஏற்ற மறுத்த டிரைவர் : மறியலில் ஈடுபட்ட பெண்கள்
ADDED : நவ 05, 2025 12:32 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே டி.அதிகரை கிராமத்தில் பெண் பயணிகளை ஏற்றாமல் வந்த டவுன் பஸ்சை திருப்புவனத்தில் மறித்து போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
திருப்புவனம் கிளை பணிமனை மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு 44 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று காலை 10:15 மணிக்கு டி.அதிகரை கிராமத்திற்கு இயக்கப்பட்ட டவுன் பஸ்சை சேகர் என்பவர் இயக்கியுள்ளார், கண்டக்டராக விஜயகுமார் பணியாற்றியுள்ளார்.
டி.அதிகரை கிராமத்திற்கு வந்த டவுன் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்களை ஏற்றாமல் வந்துள்ளது.
வேகத்தடையில் மெதுவாக செல்லும் போது ஓடி வந்து ஏறியவர்கள் டிரைவர் சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதனையும் கண்டு கொள்ளாமல் திருப்புவனம் வந்துள்ளார். பின்னால் ஷேர் ஆட்டோவில் ஏறி வந்த பெண்கள் திருப்புவனத்தில் பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிரைவர் சேகர் பஸ் பெயர் பலகையை அகற்றி விட்டார். இதனை கேட்ட மக்களிடம் டிரைவர் சேகர் அலட்சியமாக பதிலளித்தார். திருப்புவனம் போலீசார் பெண்களை சமாதானம் செய்து பஸ்சை மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

