ADDED : நவ 05, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை தே பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் தேசிய தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் பங்கேற்க தகுதி பெற்றார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 66 ஆவது குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூரில் நடந்தன.
அதில் தேவகோட்டை தே பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் தீஷ்வா உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடத்தை வென்றார். டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நாக்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு பங்கேற்க தகுதி பெற்றார்.
பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா, தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் சேவியர் ராஜ், மாணவர் இல்ல இயக்குநர் விக்டர் டிசோசா ஆசிரியர்கள் பாராட்டினர்.

