/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில் சுரங்கப்பாதையில் தண்ணீர் போக்குவரத்து கடும் பாதிப்பு
/
ரயில் சுரங்கப்பாதையில் தண்ணீர் போக்குவரத்து கடும் பாதிப்பு
ரயில் சுரங்கப்பாதையில் தண்ணீர் போக்குவரத்து கடும் பாதிப்பு
ரயில் சுரங்கப்பாதையில் தண்ணீர் போக்குவரத்து கடும் பாதிப்பு
ADDED : ஏப் 20, 2025 05:11 AM

காரைக்குடி : கல்லல் அருகே அ.சிறுவயலில் சிறிய மழைக்கே ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள், வாகன ஓட்டிகள் பல கி.மீ., சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
கல்லல் ஒன்றியத்துக்குட்பட்ட அ.சிறுவயலில் இருந்து முத்துப்பட்டி செல்லும் சாலையை விவசாயிகள், பள்ளி மாணவ மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர்.
அ. சிறுவயலில் இருந்து முத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கி விடுகிறது. தண்ணீரை அகற்றாததால், வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்த முடிவதில்லை. வெற்றியூர், சாத்தரசன்பட்டியை சுற்றியோ அல்லது கல்லலை சுற்றியோ மக்கள் செல்ல வேண்டியுள்ளது. இப்பாதையில் தண்ணீர் தேங்காத நிலையில் கூரை அமைக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.