/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செய்களத்துார் விலக்கு அருகே குழாய் உடைந்து வீணான நீர்
/
செய்களத்துார் விலக்கு அருகே குழாய் உடைந்து வீணான நீர்
செய்களத்துார் விலக்கு அருகே குழாய் உடைந்து வீணான நீர்
செய்களத்துார் விலக்கு அருகே குழாய் உடைந்து வீணான நீர்
ADDED : அக் 09, 2025 04:30 AM

மானாமதுரை :மானாமதுரை செய்களத்துார் விலக்கு அருகே குழாய் உடைந்து நீண்ட நாட்களாக ரோட்டில் குடிநீர் வீணாகி வருகிறது.
கரூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிவகங்கையில் இருந்து மானாமதுரை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரோட்டின் ஓரங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கும் பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில் மானாமதுரை செய்களத்துார் விலக்கு ரோடு அருகே 10 நாட்களுக்கும் மேலாக பதிக்கப்பட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.உடனடியாக குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.