/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாம் தமிழர் கட்சியினர் 5 பேர் மீது வழக்கு
/
நாம் தமிழர் கட்சியினர் 5 பேர் மீது வழக்கு
ADDED : மார் 17, 2024 11:52 PM
திருப்புத்துார் : திருப்புத்துாரில் தேர்தல் நடத்தை விதியை மீறி ஊர்வலமாக சென்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
சிவகங்கை லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி நேற்று பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மருது சகோதரர்கள் துாக்கிலிடப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் போலீஸ் அனுமதியின்றி அங்கிருந்து ஊர்வலமாக மணிமண்டபம் நோக்கி சென்றார். இதற்கு போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி வேட்பாளர் உட்பட நிர்வாகிகள் கோட்டை குமார் உட்பட நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சரவணன், பார்த்தசாரதி, வின்சென்ட், சேவற்கொடியோன், சிவராமன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

