/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செல்வமகள் சேமிப்பு திட்டம் நவ.,30 வரை சிறப்பு முகாம்
/
செல்வமகள் சேமிப்பு திட்டம் நவ.,30 வரை சிறப்பு முகாம்
செல்வமகள் சேமிப்பு திட்டம் நவ.,30 வரை சிறப்பு முகாம்
செல்வமகள் சேமிப்பு திட்டம் நவ.,30 வரை சிறப்பு முகாம்
ADDED : நவ 15, 2024 07:00 AM
சிவகங்கை: தபால் நிலையங்களில் செல்வ மகள், மகன் சேமிப்பு திட்டத்தில் சேர நவ., 30 வரை சிறப்பு முகாம் நடைபெறும் என சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து தபால், துணை, கிளை தபால் நிலையங்களில் செல்வ மகள், மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவக்க சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வயது 10க்கு உட்பட்ட பெண், ஆண் குழந்தைக்கு கணக்கு துவக்கலாம். இதற்காக செல்வமகள் திட்டத்திற்கு ரூ.250, செல்வ மகன் திட்டத்திற்கு ரூ.500 வீதம் டெபாசிட் செய்ய வேண்டும்.
நவ.,30ம் தேதி வரை செல்வமகள், மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவக்க சிறப்பு முகாம் நடைபெறும். இம்முகாம்களில் அனைத்து விதமான தபால் சேமிப்பு கணக்குகளையும் துவக்கி கொள்ளலாம் என்றார்.