/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வானிலை முன்னெச்சரிக்கையை 'வெப்சைட்' மூலம் அறியலாம்; பேரிடர் மேலாண்மை துறை தகவல்

ADDED : அக் 29, 2025 08:14 AM
சிவகங்கை: பேரிடர் காலத்தில் வானிலை முன்னெச்சரிக்கை தகவல்களை வெப்சைட் மூலம் அறிந்து கொள்ளலாம் என சிவகங்கை பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்ட மக்கள் வடகிழக்கு பருவ மழை குறித்த வானிலை முன்னெச்சரிக்கை குறித்த தகவல்களை TN-ALERT' வெப்சைட்டிலும், நம் இருப்பிடம் சார்ந்த வானிலை முன்னெச்சரிக்கை தகவல்களை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம்.
அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழை மானி வாரியாக தினமும் பெறப்பட்ட மழை அளவு, நீர் தேக்கங்களில் தற்போதைய நீர் இருப்பு விபரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா என அறியும் வசதி இந்த வெப்சைட்டில் உள்ளது. மேலும் பேரிடர் குறித்த வானிலை முன்னெச்சரிக்கையை அறிந்து கொண்டு பொதுமக்கள் ஆயத்த பணிகளை மேற்கொள்ள முடியும்.
இது குறித்து TN-ALERT மற்றும் SACHET போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து கொண்டு, பயன்பெறலாம். இது தவிர பேரிடர் மற்றும் கனமழை காரணமாக பாதிக்கப்படும் மக்கள் 1077 மற்றும் 04575 246 233 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர், என்றனர்.