/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையாத்தங்குடியில் திருக்கல்யாணம்
/
இளையாத்தங்குடியில் திருக்கல்யாணம்
ADDED : ஜன 02, 2026 05:34 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நடந்தது.
டிச.25ல் மாணிக்க வாசகருக்கு காப்புக்கட்டி விழாத் துவங்கியது. தினசரி மாலை 6:00 மணிக்கு மாணிக்க வாசகர் திருவீதி உலா நடந்து வருகிறது.
காலை 9:00 மணிக்கு கோயில் பிரகார மண்டபத்தில் சுவாமியும் அம்பாளும் மணக்கோலத்தில் எழுந்தருளினர். ஒக்கூர் விநாயகர் கோயிலிலிருந்து திருமண சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. ஹோமங்கள் நிறைவடைந்து காலை 10:00 மணி அளவில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் 38 ஆண்டுகளுக்கு பின்னர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
மாலையில் மாணிக்கவாசகர் திருவீதி வலம் வந்தார்.
இன்று காலை 9:00 மணிக்கு மாணிக்கவாசகர் குதிரை வாகனத்தில் புறப்பாடும். இரவில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெறும். நாளை அதிகாலை 4:00 மணிக்கு நடராஜர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் காலை காலை 8:50 மணிக்கு ஆருத்ரா தரிசனம் சிறப்பு மகா தீபாராதனை நடைபெறும்.
தொடர்ந்து தேரில் மாணிக்கவாசகர் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும்.

