/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளாப்பூரில் மாட்டுவண்டி பந்தயம்
/
காளாப்பூரில் மாட்டுவண்டி பந்தயம்
ADDED : ஜன 02, 2026 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பந்தயத்தை ஐந்து நிலை நாட்டு மறவர் பேரவை தலைவர் பொன்.குணசேகரன், கவுரவத் தலைவர் இளம்பரிதி கண்ணன் துவக்கி வைத்தனர்.
பெரிய மாடு, சிறிய மாடு, நடுமாடு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட பந்தயத்தில் 44 ஜோடி மாடுகள் பங்கேற்றன. முதல் ஆறு இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளர்கள், சாரதிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை மற்றும் பாசறையினர் செய்திருந்தனர்.

