/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் வாரச்சந்தை கழிவு
/
மானாமதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் வாரச்சந்தை கழிவு
மானாமதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் வாரச்சந்தை கழிவு
மானாமதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் வாரச்சந்தை கழிவு
ADDED : ஜூலை 28, 2025 05:33 AM

மானாமதுரை : மானாமதுரையில் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தை அன்று காய்கறி, பழங்கள் மற்றும் மீன் கழிவுகளை வைகை ஆற்றில் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் வைகை ஆறு செல்லும் பெரும்பாலான ஊர்களிலும் கழிவுநீர் வைகை ஆற்றுக்குள்ளேயே விடப்படுகிறது.
மதுரை ஐகோர்ட் கிளை கழிவு நீரை விடும் உள்ளாட்சி அமைப்பு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 5 மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டது.
மானாமதுரையில் நகரின் குறுக்கே வைகை ஆறு செல்லும் நிலையில் நகர் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பெரும்பாலும் வைகை ஆற்றுக்குள் விடப்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் விதத்தில் நகராட்சி சார்பில் தற்போது கழிவு நீரை சுத்திகரிக்கும் திட்ட பணி நடைபெற்று வருகிறது.
எனினும் வாரந் தோறும் வியாழன்று மானாமதுரையில் வைகை கரையோரம் நடக்கும் வாரச்சந்தையன்று வியாபாரிகள் காய்கறி,பழ கழிவு, மீன், இறைச்சி கழிவுகளை ஆற்றுக்குள் கொட்டி செல்வதால் வைகை ஆறு மேலும் மோசமடைந் துள்ளது.
நகராட்சி நிர்வாகத்தினர் வைகை ஆற்றுக்குள் கழிவுகளை கொட்டும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

