/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாத்துக்கள் வளர்ப்புக்கு வரவேற்பு
/
வாத்துக்கள் வளர்ப்புக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 07, 2024 11:41 PM

திருப்புவனம், பூவந்தி, கலியாந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. குள்ள, நீள வாத்து என நான்கு வகைகள் இருந்தாலும் குள்ள வாத்து அதகிளவில் வளர்க்கப்படுகின்றன.
இவை பிறந்த ஆறாவது மாதத்தில் இருந்தே முட்டையிட தொடங்கும். தினமும் முட்டையிடுவதின் மூலம் 140 முட்டைகள் வரை இடும். இதன் முட்டைகள் தமிழகத்தை விட கேரளாவில் அதிகம் வாங்குகின்றனர். ஒரு முட்டை விலை ரூ.7.50க்கு விற்பது வழக்கம். தற்போது இதன் விலை ரூ.9.50 ஆக உயர்ந்துவிட்டது.
கேரளாவில் அதிக விலை கொடுத்து வாங்குவதால், வாத்து வளர்ப்போர் ஆவலுடன் வளர்க்கின்றனர். கோடையில் முட்டை உற்பத்தி வெகுவாக குறையும். இக்கால கட்டத்தில் முட்டைக்கு பற்றாக்குறை ஏற்படும். இதனால் தற்போது வாத்து முட்டைகளின் தேவை அதிகரித்துள்ளன.
இதனால், திருப்புவனம் பகுதியில் வயல்களில் அதிகளவில் வாத்துக்களை வளர்த்து வருகின்றனர்.
இது குறித்து திருப்புவனம் முத்துப்பாண்டி கூறியதாவது: இங்கு 700 க்கும் மேற்பட்ட வாத்துக்கள் வளர்க்கிறேன். தினமும் 500 முட்டைகள் கிடைக்கும்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை கேரளாவிற்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தான் கேரளாவிற்கு அதிகளவில் முட்டைகள் செல்கின்றன. முட்டைக்கு நல்ல லாபமும் கிடைக்கின்றன.