ADDED : பிப் 21, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நடைபெற்ற 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில்' 67 பயனாளிகளுக்கு ரூ.14.00 லட்ச நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
சிங்கம்புணரி அரசு மருத்துவமனை, மாணவ விடுதி, பள்ளிகள், அங்கன்வாடிகள், நூலகம், சாலைப் பணிகள் மற்றும் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், திட்ட இயக்குநர் வானதி, இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேந்திர பிரசாத், சிங்கம்புணரி தாசில்தார் பரிமளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.