நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: நலம் காக்கும் ஸ்டாலின் பொது மருத்துவ முகாம் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமில் 3 ஆயிரத்து 124 பேருக்கு பல பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பொற்கொடி தலைமை யில் நடந்தது. பள்ளி தலைமை யாசிரியர் சேவியர்ராஜா வரவேற்றார். கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி முகாமின் பயன் குறித்து பேசினார்.
சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், எம்.எல்.ஏ. மாங்குடி, மாவட்ட சுகாதார அலுவலர் (பொ) சுபாஷ் காந்தி, வட்டார மருத்துவ அலுவலர் அழகுதாஸ் , சிறப்பு மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.