/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விதைகள் வாங்கும் போது விவசாயிகள் கவனிக்க வேண்டியது
/
விதைகள் வாங்கும் போது விவசாயிகள் கவனிக்க வேண்டியது
விதைகள் வாங்கும் போது விவசாயிகள் கவனிக்க வேண்டியது
விதைகள் வாங்கும் போது விவசாயிகள் கவனிக்க வேண்டியது
ADDED : அக் 31, 2025 12:36 AM
திருப்புத்துார்: பயிர் சாகுபடியின் போதும் விதை வாங்கும்போதும் விவசாயிகள் கவனிக்க வேண்டியவற்றை வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் சக்திகணேஷ் அறிவுறுத்தியுள்ளதாவது:
அனைத்து பயிர்களிலும் மகசூல் அதிகரிக்க தரமான சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். நல்ல முளைப்பு திறன், தேவையான பயிர் எண்ணிக்கை, சீரான பயிர் வளர்ச்சி, ஒரே நேரத்தில் பூத்து முதிர்ச்சி அடைதல், கலப்படம் இல்லா அதிக மகசூல் தகுதி பெற்ற விதைக்கு சான்றளிக்கப்படுகிறது.
உரிமம் உள்ள தனியார் விற்பனையாளர்களிடம் சான்றட்டையுடன்,ரசீதில் குவியல் எண்,எடை ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரகங்களின் விதை வாங்கும் போது தனித்தனியாக வைக்க வேண்டும். விதைப்பதற்கு முன்பு முளைப்பு திறன் சோதனை செய்ய வேண்டும்.
முளைப்புத் திறன் சோதனையை சிவகங்கை தொண்டி ரோட்டில் உள்ள விற்பனை குழு வளாகத்தில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் கட்டணம் செலுத்தி செய்யலாம். இதன் மூலம் நடவு செய்த பின் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கலாம். வெவ்வேறு ரக விதைகளை ஓரிரு நாள் இடைவெளியில் விதைக்கலாம்.
இதனால் கலப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். திருந்திய நெல் சாகுபடி செய்ய இயலாத சூழ்நிலையில் எட்டு அடிக்கு ஒரு அடி பாத்தி விட்டு நட வேண்டும்.
இதனால் காற்றோட்டம் ஏற்படுவதுடன் உரம், பயிர் பாதுகாப்பு செய்ய வசதியாக இருக்கும். ஒரு ரகத்தில் மீதமுள்ள நாற்றுக்களை வேறு ரகம் நடவு செய்த வயலில் நடவு செய்ய கூடாது.

