ADDED : டிச 17, 2024 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை விஸ்வநாதசுவாமி கோயில் ஐயப்பனுக்கு மண்டல பூஜைக்காக நேற்று முகூர்த்தகால் நட்டு பூஜை செய்தனர்.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் கார்த்திகையில் மாலை அணிந்து சபரி மலைக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர்.
விரதத்தை துவக்கிய பக்தர்கள் மண்டல பூஜைக்காக டிச.,25 அன்று இரவு 7:00 மணிக்கு முதல் கால சங்காபிேஷகம் நடக்கிறது.
டிச.26 அன்று காலை 9:00 மணிக்கு கஜபூஜை, 2ம் கால சங்காபிேஷகம் உட்பட சிறப்பு பூஜை நடைபெறும். அன்று மாலை 6:30 மணிக்கு மின் அலங்காரத்தில் ஐயப்பன் திருவீதி உலா வருவார். அன்று இரவு 9:00 மணிக்கு புஷ்பாஞ்சலியுடன் மண்டல கால பூஜை நிறைவுபெறும்.
ஐயப்ப பக்தர்கள் விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.

