/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நடுரோட்டில் பள்ளம்; எப்போது தான் தீர்வு
/
நடுரோட்டில் பள்ளம்; எப்போது தான் தீர்வு
ADDED : மார் 14, 2024 11:39 PM

தேவகோட்டை: தேவகோட்டை மாந்தோப்பு வீதி சரஸ்வதி வாசக சாலை செல்லும் ரோட்டின் சந்திப்பில் சாக்கடை கால்வாய் செல்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் இந்த கால்வாயின் மேல் ரோட்டின் குறுக்கே கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. கால்வாய் நடுவில் ஒரு மின்கம்பமும் உள்ளது. பாலம் கட்டும் போது மின்கம்பத்தை தள்ளி வைக்காமல் பாலத்தை கட்டி விட்டனர். பாலத்தின் நடுவில் மட்டுமில்லாது தெருவில் மின்கம்பம் நடுவில் அமைந்துள்ளது.
பாலத்தின் நடுவில் மின்கம்பம் அருகே கான்கிரீட் அரிப்பதும், பள்ளம் உருவாவதும் அருகில் உள்ளவர்கள் சிமென்ட் பலகைகளை போடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது கான்கிரீட் பெரிய அளவில் அரித்து உடைந்து விட்டது. நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இந்த பகுதியில் விபத்தை தவிர்க்க புதிய பாலம் அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

