/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்ப பதிவு எப்போது
/
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்ப பதிவு எப்போது
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்ப பதிவு எப்போது
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்ப பதிவு எப்போது
ADDED : மே 16, 2025 03:17 AM
சிவகங்கை: தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மையில்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவச சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டுகளில் ஏப்.22 தொடங்கியது.
இந்தாண்டும் ஏப்ரலில் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை தொடங்கவில்லை. இவற்றை எதிர்பார்த்து பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக காத்திருக்கின்றனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆர்டிஇ தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். மாநிலம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன.
இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர்பவர்கள் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம்.
தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு நடை முறைக்கு வந்த இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
வரும் கல்வியாண்டுக்கான 2025--26 இலவச சேர்க்கைக்கு இணைதள விண்ணப்பப் பதிவுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இதுவரை தொடங்கப்படாததால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை சேர்ப்பதற்கு எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அரசு இந்தாண்டும் தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.