/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வாரச்சந்தையில் வெள்ளை பூண்டு கிலோ ரூ.200
/
மானாமதுரை வாரச்சந்தையில் வெள்ளை பூண்டு கிலோ ரூ.200
மானாமதுரை வாரச்சந்தையில் வெள்ளை பூண்டு கிலோ ரூ.200
மானாமதுரை வாரச்சந்தையில் வெள்ளை பூண்டு கிலோ ரூ.200
ADDED : மார் 08, 2024 12:57 PM

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் வெள்ளை பூண்டு ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனையானதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
மானாமதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் மதுரை, சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 300க்கு மேற்பட்ட வியாபாரிகள் வந்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்வர்.
இப்பொருட்களை வாங்குவதற்காக மானாமதுரையை சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெள்ளை பூண்டு கிலோ ரூ 500 க்கு விற்ற நிலையில் தற்போது அதன் விலை குறைந்து ரூ. 200க்கு விற்பனையாகி வருகிறது.
திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரி குணா கூறுகையில், தற்போது வெள்ளைப் பூண்டு விளைச்சல் அதிகமானதை தொடர்ந்தும், மொத்த மார்க்கெட்டுக்கு வரத்து கூடியுள்ளதால் வெள்ளைப் பூண்டின் விலை குறைந்துள்ளது.
சிறிய ரக மலைப் பூண்டு ரூ.200க்கும், பெரிய ரக மலைப் பூண்டு ரூ.300லிருந்து ரூ.350 வரையும், மிகச் சிறிய ரச பூண்டு ரூ.150லிருந்து ரூ.200 வரை விற்பனையாகி வருவதாக தெரிவித்தார்.

