/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வனத்துறையினர் கூண்டு வைத்தும் 7 மாதமாக சிறுத்தை ஏன் சிக்கவில்லை?
/
வனத்துறையினர் கூண்டு வைத்தும் 7 மாதமாக சிறுத்தை ஏன் சிக்கவில்லை?
வனத்துறையினர் கூண்டு வைத்தும் 7 மாதமாக சிறுத்தை ஏன் சிக்கவில்லை?
வனத்துறையினர் கூண்டு வைத்தும் 7 மாதமாக சிறுத்தை ஏன் சிக்கவில்லை?
ADDED : மார் 07, 2024 01:54 AM
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, தண்டரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சனத்குமார் காட்டாறு பகுதி, இஸ்மாம்பூர், அடவிசாமிபுரம் பகுதிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிகிறது. கடந்தாண்டு சனத்குமார் நதி அருகே ஆட்டை தாக்கி கொன்ற சிறுத்தை, தனியார் ரிசார்ட்டை ஒட்டிய பகுதியில், நாய் ஒன்றை கடித்து கொன்றது.
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறையினர் ஆங்காங்கே தானியங்கி கேமராக்களை வைத்துள்ளனர். இன்னமும் பிடிபடாமல் சுற்றித் திரியும் சிறுத்தையால், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இன்னமும் பல இடங்களில், மர்மமான முறையில் ஆடுகளை சிறுத்தை கொன்று வருகிறது.
அடவிசாமிபுரம் அருகே உள்ள மதனகிரி முனீஸ்வரன் கோவில் தேர் திருவிழா அடுத்த மாதம் நடக்க உள்ளது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவர்.
அச்சமயத்தில் சிறுத்தையால் பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சிறுத்தையை பிடிக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, தனியார் ரிசார்ட் பகுதி அருகே, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் வைத்துள்ள கூண்டு மூடி கிடக்கிறது. உள்ளே எந்த விலங்குகளும் இல்லை. அதனால், அந்த கூண்டில் சிறுத்தை சிக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிறுத்தை குறித்த பீதியில் இருக்கும் மக்களை திருப்திபடுத்த, இதுபோன்ற டுபாக்கூர் கூண்டுகளை வனத்துறையினர் வைத்துள்ளனரா என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து, வனத்துறையினரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
நாங்கள் வைத்துள்ள கூண்டு பக்கம் சிறுத்தை வருவதில்லை. தனியார் ரிசார்ட்டை சுற்றியுள்ள மலைகளில் இருந்து நாய்களை நோட்டமிடும் சிறுத்தை, அவற்றை கொன்று இழுத்து சென்று விடுகிறது.
தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை பிடிக்க, வனத்துறையினர் தீவிரமாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

