/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'தமிழகத்தில் எந்த திட்டத்திற்கும் அம்பேத்கர் பெயர் வைக்காதது ஏன்' எச். ராஜா கேள்வி
/
'தமிழகத்தில் எந்த திட்டத்திற்கும் அம்பேத்கர் பெயர் வைக்காதது ஏன்' எச். ராஜா கேள்வி
'தமிழகத்தில் எந்த திட்டத்திற்கும் அம்பேத்கர் பெயர் வைக்காதது ஏன்' எச். ராஜா கேள்வி
'தமிழகத்தில் எந்த திட்டத்திற்கும் அம்பேத்கர் பெயர் வைக்காதது ஏன்' எச். ராஜா கேள்வி
ADDED : டிச 21, 2024 01:57 AM
காரைக்குடி:அம்பேத்கர் மீது மரியாதை இருப்பதாக கூறும் தி.மு.க., எந்த திட்டத்திற்கும் அவர் பெயரை வைக்காதது ஏன் என பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது:
அம்பேத்கர் பார்லிமென்டில் நுழையக்கூடாது என்று வேலை பார்த்தவர் நேரு. இந்திராவிற்கு 55 ஏக்கரிலும்,ஜவஹர்லால் நேருவுக்கு 45 ஏக்கரிலும் நினைவிடம் அமைத்துள்ளனர். அம்பேத்கர் நினைவிடத்திற்கு இவர்கள் ஒதுக்கியது 4 ஏக்கர். மோடி பிரதமரான பிறகு அம்பேத்கருக்கு 5 நினைவு சின்னங்கள் ஏற்படுத்தி உள்ளார். காங்., அம்பேத்கருக்கு எதுவும் செய்யவில்லை. மாறாக சிறுமைப்படுத்தி தான் உள்ளது.
தி.மு.க., அரசு அம்பேத்கரை வைத்து நாடகம் நடத்துகின்றது. அம்பேத்கர் மீது மரியாதை இருப்பதாக கூறுபவர்கள் எந்த திட்டத்திற்கும் அவர் பெயரை வைக்காதது ஏன்.
குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவருக்கு இறுதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால்,வங்கதேச ஹிந்துக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.,விற்கு அனுமதி இல்லை. நாட்டின் நலனுக்கு விரோதமாக தி.மு.க., ஆட்சி நடந்து வருகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. மாணவர்கள் ஆயுதங்களுடன் பள்ளி செல்கின்றனர். மற்ற மாநிலங்களில் ஜாதி சண்டை குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தேசியவாதிகளுக்கு எதிராக அல்லது பா.ஜ.,வுக்கு எதிராக பேசினால் தான் தமிழக மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று விஜய் பிரம்மையில் உள்ளார். இவ்வாறு கூறினார்.

