/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அகழாய்வு துவங்க தாமதம் ஏன்
/
கீழடி அகழாய்வு துவங்க தாமதம் ஏன்
ADDED : பிப் 03, 2024 04:21 AM
கீழடி, : கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணிக்காக நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
கீழடியில் 2015ல் மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆற்றங்கரை நாகரீகம்குறித்த அகழாய்வு தொடங்கப்பட்டு மூன்று கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறை நடத்தி ஏழாயிரத்து 818 பொருட்களை கண்டறிந்தனர். அதன்பின் தமிழகதொல்லியல் துறை சார்பில் இதுவரை ஆறு கட்ட அகழாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அகழாய்வு பணி ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் தொடங்கப்பட்டு செப்டம்பரில் முடிவடையும். அதன்பின் அடுத்த கட்ட அகழாய்வு பணிகள் குறித்து தொல்லியல் துறை சார்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் காபா விடம் விண்ணப்பிக்கப்படும், மத்திய அரசின் அனுமதிக்கு பின் அடுத்த வருட அகழாய்வு பணிகள் நடைபெறும்.
9ம் கட்ட அகழாய்வு செப்டம்பரில் முடிவடைந்த பின் ஜனவரில் 10ம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ள இடம், பரப்பளவு, பணிகள் நடைபெற உள்ள நாட்கள் குறித்து மத்திய அரசின் காபாவிற்கு விண்ணப்பிக்கப்பட்டு ஒப்புதலும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் பிப்ரவரி பிறந்தும் இன்று வரை பணிகள் தொடங்கப்படவே இல்லை.
தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் அகழாய்வு பணிகளுக்காக தமிழக தொல்லியல் துறை டிசம்பரிலேயே நிதி ஒதுக்கி பணி தொடங்கப்படும், அ.தி.மு.க., ஆட்சியின் போது டிசம்பரிலேயே நிதி ஒதுக்கப்பட்டு திட்டமிட்டபடி ஜனவரியில் பணிகள் தொடங்கின.
ஆனால் இந்தாண்டு கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்நடந்து வருவதால் நிதி ஒதுக்கப்படவில்லை. நிதிகள் அனைத்தும் வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. மத்திய அரசின் அனுமதி கிடைத்தும், இன்று வரை நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படவில்லை.
தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

