/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரியக்குடியில் காத்திருக்கும் வாகனங்கள் நெரிசலை தீர்க்க பாலம் கட்டப்படுமா
/
அரியக்குடியில் காத்திருக்கும் வாகனங்கள் நெரிசலை தீர்க்க பாலம் கட்டப்படுமா
அரியக்குடியில் காத்திருக்கும் வாகனங்கள் நெரிசலை தீர்க்க பாலம் கட்டப்படுமா
அரியக்குடியில் காத்திருக்கும் வாகனங்கள் நெரிசலை தீர்க்க பாலம் கட்டப்படுமா
ADDED : நவ 22, 2024 04:16 AM
காரைக்குடி: காரைக்குடி அருகே அரியக்குடி ரயில்வே கேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி நகரையொட்டி இலுப்பக்குடி, அரியக்குடி, பொன்நகர், லட்சுமி நகர் பகுதிகள் உள்ளன. தற்போது காரைக்குடி மாநகராட்சியுடன் இவ்வூராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சிகளை சுற்றிலும் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதிகரித்து வரும் குடியிருப்புகளால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரக் கணக்கான வாகன ஓட்டிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இவ்வழியாக சென்று வருகின்றனர்.
காரைக்குடி ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள அரியக்குடி வழியாக ஏராளமான ரயில்கள் சென்று வருகின்றன.
ரயில்கள் செல்லும் போது, ரயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட துாரம் வாகனங்கள் காத்துக் கிடக்கும் சூழல் ஏற்படுகிறது. பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என பலரும் சிரமப்படுகின்றனர்.
அரியக்குடி ரயில்வே கேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய மேம்பாலம் அமைக்கக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், அரியக்குடி ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.