/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சென்னை தாம்பரம் -- திருச்செந்துார் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா * பயணிகள் நல கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 22, 2025 09:13 PM
சிவகங்கை:துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7 ல் நடக்கவுள்ள கும்பாபிேஷகத்தை காண வரும் பக்தர்களுக்காக சென்னை தாம்பரம் முதல் திருச்செந்துார், துாத்துக்குடி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் நல கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் 2 ம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜூலை 7 திங்களன்று கும்பாபிேஷகம் நடக்கவுள்ளது. ஹிந்து அறநிலையத்துறை சார்பில் கும்பாபிேஷகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. கும்பாபிேஷகத்தை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் சென்னை தாம்பரத்திலிருந்து ஜூலை 5 மற்றும் 6 ல் திருச்செந்துார், துாத்துக்குடிக்கு இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். கும்பாபிேஷகம் முடிந்து பக்தர்கள் திரும்ப வசதியாக திருச்செந்துார், துாத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு ஜூலை 7 மற்றும் 8 ல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.
இந்த ரயில்கள் விழுப்புரம், விருத்தாச்சலம், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி ஸ்டேஷன்கள் வழியாக இயக்கினால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு பயணிகள் நல கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.