/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறை தீர்க்கும் நாளில் மனு எழுத ரூ.30 முதல் 60 வரை வசூல் தடை விதிப்பாரா கலெக்டர் பொற்கொடி
/
குறை தீர்க்கும் நாளில் மனு எழுத ரூ.30 முதல் 60 வரை வசூல் தடை விதிப்பாரா கலெக்டர் பொற்கொடி
குறை தீர்க்கும் நாளில் மனு எழுத ரூ.30 முதல் 60 வரை வசூல் தடை விதிப்பாரா கலெக்டர் பொற்கொடி
குறை தீர்க்கும் நாளில் மனு எழுத ரூ.30 முதல் 60 வரை வசூல் தடை விதிப்பாரா கலெக்டர் பொற்கொடி
ADDED : ஜூலை 15, 2025 03:37 AM
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வருவோரிடம் மனு எழுதி தரரூ.30 முதல் 60 வரை வசூலிக்கின்றனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர்பொற்கொடி தலைமையில் திங்கள் தோறும் பொது குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது.
மாவட்ட அளவில் இருந்து பட்டா மாறுதல், இடப்பிரச்னை, போலீஸ் சார்ந்த நடவடிக்கை, புதிய ரேஷன் கார்டு, அரசின் நிவாரண தொகை, உதவி தொகை கேட்டு திங்கள் தோறும் 450 முதல் 500 பேர் மனு கொடுத்து செல்கின்றனர். இவற்றை பெறும் கலெக்டர் அந்தந்த துறை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்கிறார்.
பரிந்துரை செய்த மனுக்கள் மீது உரிய காலத்தில் அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், தொடர்ந்து ஒரே பிரச்னைக்காக பல மாதங்கள் வரை கலெக்டர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இது போன்று மனு அளிக்க வரும் கிராம மக்கள் செலவில்லாமல்மனுக்களை எழுதி, கலெக்டரிடம் வழங்க கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்ட நுழைவு வாயிலில் நேரு யுவகேந்திரா சார்பில் பெண்கள் இலவசமாக மனுக்களை எழுதி தருகின்றனர்.
ஆனால், பெரும்பாலான மக்கள் இலவசமாக மனு எழுதி தரும் இவர்களிடம் செல்லாமல்,கலெக்டர் அலுவலகத்திற்கு முன் அமர்ந்து மனு எழுதி தருவோரிடம் மனுவிற்கு ரூ.30 முதல் 60 வரை கொடுத்து மனுக்களை எழுதி வாங்கி செல்கின்றனர்.
இதை தவிர்க்க கலெக்டர் பொற்கொடி, இலவசமாக மனு எழுதி தருவோருக்கு, மக்கள் அனைவரும் மனு எழுத வரும் வகையிலான இடத்தை தேர்வு செய்து தர வேண்டும். அதே போன்று புரோக்கர்கள் போல் மனு எழுதி கட்டண வசூலில் ஈடுபடுவோரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.