/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை சட்டசபை பொது தொகுதியாக மாறுமா: தொகுதி வளர்ச்சியே இல்லை என கவலை
/
மானாமதுரை சட்டசபை பொது தொகுதியாக மாறுமா: தொகுதி வளர்ச்சியே இல்லை என கவலை
மானாமதுரை சட்டசபை பொது தொகுதியாக மாறுமா: தொகுதி வளர்ச்சியே இல்லை என கவலை
மானாமதுரை சட்டசபை பொது தொகுதியாக மாறுமா: தொகுதி வளர்ச்சியே இல்லை என கவலை
ADDED : மே 02, 2024 05:29 AM
திருப்புவனம்: மானாமதுரை (தனி) சட்டசபை தொகுதி கடந்த 47 ஆண்டாக தனி தொகுதியாகவே நீடித்து வரும் நிலையில் வரும் சட்டசபைதேர்தலுக்கு முன் பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இத்தொகுதியில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி தாலுகாக்கள் உள்ளன. இதில் இளையான்குடி தனி தொகுதியாக இருந்தபோது, கடந்த 2011ல் தொகுதி சீரமைப்பின் போது மானாமதுரை தொகுதியுடன் இணைக்கப்பட்டது. மானாமதுரை சட்டசபை தொகுதியில் 2024 லோக்சபா தேர்தலில் 324 ஓட்டுச்சாவடிகளில் 2,78,913 வாக்காளர்கள் உள்ளனர். மானாமதுரை சட்டசபை தொகுதியில் முதன்முறையாக 1952 ல் கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.எல்.ஏ., ஆனார். அதன்பின் காங்., சுதந்திரா கட்சி, தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா., என மாறி மாறி எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றனர். 1971ம் ஆண்டு திருப்புவனத்தை சேர்ந்த சோணையா (தி.மு.க.,) எம்.எல்.ஏ., வாக தேர்வாகினார். அவரது பதவி காலம் முடிந்து அடுத்து 1976ம் ஆண்டு தேர்தலில் தான் இத்தொகுதி தனி தொகுதியாக மாற்றப்பட்டது. தொடர்ந்து 48 ஆண்டாக இத்தொகுதி தனி தொகுதியாகவே நீடித்து வருகிறது. பொதுவாக 3 முறை அல்லது 15 ஆண்டுகள், அரசு விரும்பும் வரை ஒரு தொகுதி தனி தொகுதியாக இருக்கலாம். தமிழக அரசு விரும்பும் வரை என்ற ஒரே ஒரு விதியை வைத்து கொண்டு மானாமதுரையை தனி தொகுதியாக நீடிக்கிறது. ஆண்டு தோறும் நவ., 15 க்குள் தொகுதியை மாற்றம் செய்வது குறித்து அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை வைக்கலாம் என்ற விதி உள்ளது. ஆனால் பொது தொகுதியாக மாற்ற இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைக்கவில்லை.
இதனால் மானாமதுரை தொகுதியில் யாருமே போட்டியிட முடியவில்லை. மானாமதுரை தொகுதியில் தொழிற்சாலை, அரசு கல்லூரி, தொழிற்பயிற்சி நிறுவனம் ஏற்படுத்தப்படவில்லை. அதற்காக இதுவரை இருந்து எம்.எல்.ஏ.,க்கள் முயற்சிக்கவில்லை. மானாமதுரையில் நிறைவேறாத கோரிக்கைகள் அதிகம் உள்ளன. தனி தொகுதியாக இருப்பதால் வெளியூர் நபர்களையே கட்சிகளும் வேட்பாளர்களாக நிறுத்துகிறது. இதை பொது தொகுதியாக மாற்றினால் அதிகளவில் போட்டியிடுவர்.
இது குறித்து வழக்கறிஞர் மணிமாறன் கூறியதாவது: தகவல் உரிமை அறியும் சட்டத்தின் விண்ணப்பித்த போது மக்கள் தொகை, பட்டியல் இன மக்கள் எண்ணிக்கை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து தனி தொகுதி, பொது தொகுதி என மறு சீரமைப்பு ஆணையம் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கென குறிப்பிட்ட காலக்கெடு கிடையாது. மானாமதுரை தொகுதியை பொது தொகுதியாக மாற்ற லோக்சபாவில் சட்டம் இயற்றப்பட்டு மறு சீரமைப்பு ஆணையம் அமைத்தால் மட்டுமே முடியும் என பதில் அளித்துள்ளனர். 2026 ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் இத்தொகுதியை பொது தொகுதியாக மாற்ற வேண்டும்.

